பார்த்திபன் பார்வையில் சர்ச்சையால்தான் கோடிகளை வசூலிக்கிறதா ‘பொன்னியின் செல்வன்’?

By செய்திப்பிரிவு

நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படம் குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார்; சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருந்தார். இப்படம் இதுவரை உலக அளவில் ரூ.400 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் 180 கோடியைத் தாண்டி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''Crosses-400Crores!!!! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம் மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்! எழுப்பினால் …இன்னும் ஒரு 100!'' என பதிவிட்டுள்ளார். இது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், ''பார்த்திபன் பார்வையில் இந்து மத சர்ச்சையால்தான் கோடிகளை வசூலிக்கிறதா ‘பொன்னியின் செல்வன்’? பல கோடிகளை ஈட்டும் அளவுக்கு ஒர்த் ஆன கன்டென்ட் இல்லையா?'' என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்