அக்டோபர் 14-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வைபவ்-ன் பபூன்

By செய்திப்பிரிவு

நடிகர் வைபவ் நடித்துள்ள 'பபூன்' திரைப்படம் நாளை மறுநாள் (அக்டோபர் 14-ம் தேதி) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் ‘பபூன்’. இயக்குநர் அசோக் வீரப்பன், கார்த்திக் சுப்பராஜிடம் ‘பீட்சா’ (2012), ‘ஜிகர்தண்டா’ (2014) படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜின் 'ஜெகமே தந்திரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ஜோஜு ஜார்ஜ். கிராமத்து பாடல்களால் கவனம் பெற்ற அந்தக்குடி இளையராஜா படத்தில் இவர் நடித்துள்ளார். வைபவ்-க்கு ஜோடியாக ‘நட்பே துணை’ நாயகி அனகா நடித்துள்ளார். நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப்பெற்ற இப்படம் அக்டோபர் 14-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்