டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் மலையாள பட பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் மலையாள திரைப்படமான 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' (Ajayante Randam Moshanam) படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

சுஜீத் நம்பியார் எழுத்தில் அறிமுக இயக்குநர் ஜித்தின் லால் இயக்கும் புதிய படம் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்'. டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் கீர்த்தி ஷெட்டி. இவர்களைத் தவிர்த்து பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, ரோகினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், பூஜையுடன் இன்று படத்தின் பணிகள் தொடங்கின. இப்படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், ''தமிழ்நாட்டின் காரைக்குடியை ஒட்டிய பகுதிகளில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 1900, 1950, 1990 ஆகிய மூன்று காலக்கட்டத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாக்கப்பட உள்ளது. இதில் டோவினோ தாமஸ் 3 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார். மலையாளம் தவிர தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் இப்படம் வெளியாகும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்