'' விஜய் சேதுபதியுடன் ஆழமான உரையாடல்கள், விஜய் எனக்கு ருசிகரமான உணவை ஊட்டி விட்டது என அத்தனையும் அருமையான நினைவுகள். இவை அனைத்திற்கும் இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாவிற்கு நன்றி'' என ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படம் 'ஜவான்'. இந்தப் படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள கோகுலம் செட்டில்தான் ‘ஜவான்’ படப்பிடிப்பு நடந்தது. இந்த செட்டிலேயே நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பும் நடந்து வந்ததால், நடிகர் ரஜினியும், ஷாருக்கானும் சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில், சென்னையில் நடந்த படப்பிடிப்பு அனுபவம் குறித்து ஷாருக்கான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், “ஜவான் படக்குழுவுடன் 30 நாட்கள் என்னவொரு அனுபவமாக இருந்தது! தலைவர் ரஜினிகாந்தை பார்த்தது எனக்கு ஆசீர்வாதம். மேலும், நயன்தாராவுடன் படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி கொண்டாடியது, விஜய் சேதுபதியுடன் ஆழமான உரையாடல்கள், தளபதி விஜய் எனக்கு ருசிகரமான உணவை ஊட்டி விட்டது என அத்தனையும் அருமையான நினைவுகள். இவை அனைத்திற்கும் இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாவிற்கு நன்றி. சீக்கிரம் சிக்கன் 65 ரெசிப்பி சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்’ என மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.
ஷாருக்கானின் இந்த ட்வீட்டிற்கு இயக்குநர் அட்லி, ‘என்னுடைய கரியரிலேயே மறக்க முடியாத படமாக இதை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி சார். சென்னையில் படப்பிடிப்பு நடத்த அனுமதித்து 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற செய்ததற்கு நன்றி. ‘கிங் இஸ் ஆல்வேஸ் கிங்' (king is a king always)’’ எனக் குறிப்பிட்டு, சீக்கிரம் மும்பையில் ஷாருக்கானை சந்திக்க இருப்பதாக அட்லீ தெரிவித்துள்ளார்.
» மனதை மயக்குகிறது ‘மல்லிப்பூ’ பாடல் - சீமான் சிலாகிப்பு
» 'மைக்' மோகன் என அழைப்பதற்கு காரணம் உண்டு: நடிகர் மோகன் பகிர்வு
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago