வெற்றிமாறன் இயக்கத்தில் பிரபாகரன் வாழ்க்கை கதை - முன் தயாரிப்பு பணிகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அருள்மொழிச் சோழன் கதைகளை வெற்றிமாறன் இயக்க, தான் தயாரிக்க இருப்பதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் பதிவில் அவர், “தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், விடுதலைப் போராளி வே.பிரபாகரனின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்குத் தமிழர்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும்” என்று குறிப்பிட்டுள்ளார். படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறனிடம் கேட்டபோது, “பிரபாகரனின் வாழ்க்கைக் கதையை அதற்கான காலம் வரும்போது இயக்குவேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்