பார்வையாளர்களை மிரளவைக்கும் ‘மிரள்’ படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு

By செய்திப்பிரிவு

சென்னை: காட்சி அமைப்புகளால் பார்வையாளர்களை மிரளவைக்கும் ‘மிரள்’ திரைப்படத்தின் டீசர் இப்போது வெளியாகியுள்ளது. இதனை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இந்த டீசரை வெளியிட்டிருந்தார்.

நடிகர்கள் பரத், வாணி போஜன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.டில்லி பாபு படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி பேனரில் தயாரித்துள்ளார், சக்தி பிலிம் பேக்டரி இந்த படத்தை வெளியிடுகிறது. எம்.சக்திவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரசாத், இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு பணியை சுரேஷ் பாலா, படத்தொகுப்பு பணியை கலைவாணன், கலை இயக்குனராக மணிகண்டன் ஸ்ரீனிவாசன், சண்டை காட்சிகளை டேஞ்சர் மணி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். சுமார் 1.21 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் பார்வையாளர்களை மிரள வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

நெல் வயல், மலை, கிராம சாலை என படத்தின் டீசர் ஆரம்பமாகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நகரில் இருந்து கிராமம் திரும்பும் பரத் மற்றும் குடும்பத்தினர், அங்கு எதிர்கொள்ளும் திகில் அனுபவங்கள் தான் படத்தின் ஒன்லைன் என தெரிகிறது. வரும் நவம்பர் வாக்கில் இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசர் வீடியோவை பார்க்க...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்