கார்த்தி நடிக்கும் 'சார்தார்' திரைப்படமும், சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படமும் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகின்றன.
அண்மையில் வெளியான 'டான்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'பிரின்ஸ்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர, நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். படம் வரும் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் 'சர்தார்'. பிரின்ஸ் பிக்சர் பேனில் எஸ்.லக்ஷ்மன் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ராஷி கண்ணா, ஷங்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த், முரளி சர்மா, இளவரசு ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ். படம் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
» ‘ஆதிபுருஷ்’ டீசர் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்: நடிகர் பிரபாஸ்
» உலகம் முழுக்க ரூ.300 கோடியுடன் வசூலில் முன்னேறும் பொன்னியின் செல்வன்
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இரண்டு படங்களும் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago