தென்னிந்திய நடிகர்களோடு இணைந்தால் ரூ.4000 கோடி வசூலிக்கலாம் - சல்மான் கான் 

By செய்திப்பிரிவு

மும்பை: தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகர்கள் ஒன்றிணைந்து நடித்தால் ரூ.4,000 கோடி வரை வசூலிக்கலாம் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'லூசிஃபர்'. இப்படம் தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக்காகியுள்ளது. இதில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க அவருடன் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் சல்மான் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மோகன்ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். அக்டோபர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் கான், ''பெரும்பாலானோர் ஹாலிவுட்டில் நடிக்க ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நான் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். மக்கள் ரூ.300-ரூ.400 கோடி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள், தென்னிந்திய சினிமா நடிகர்களும், பாலிவுட் நடிகர்களும் இணைந்து நடித்தால் பாக்ஸ் ஆபீஸில் படம் ரூ.3,000-ரூ.4,000 கோடி வசூலை எட்டும். அதன் மூலம் பரந்த பார்வையாளர்களிடம் படத்தை கொண்டு சேர்க்க முடியும்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்