இந்திப் படத்தில் சாரா அலிகானுக்கு பதிலாக சமந்தா

By செய்திப்பிரிவு

நடிகை சமந்தா இந்தியில் கரண் ஜோஹர் தயாரிக்கும் படத்தில் அறிமுகமாவதாக இருந்தது. ஆனால், அந்தப் படம் தொடங்கப்படவில்லை. அடுத்து ஆயுஷ்மன் குரானா ஜோடியாக நடிப்பதாக செய்தி வெளியானது. பிறகு அதுபற்றியும் தகவல் வெளிவரவில்லை. இந்நிலையில் நடிகை சமந்தா, விக்கி கவுசல் ஜோடியாக ‘த இம்மோர்டல் அஸ்வத்தம்மா’ என்ற படத்தில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தில் சாரா அலிகான் நடிப்பதாக இருந்தது. அவருக்குப் பதிலாக சமந்தா நடிக்கிறார். ஆதித்யா தர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. இது புராணக் கதையை மையமாகக் கொண்ட படம். இதற்காக நடிகர் விக்கி கவுசல் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE