மலையாள திரைப்பட இயக்குநர் சனல்குமார் சசிதரன். இவர் ‘செக்ஸி துர்கா’ உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன், ‘நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து, கந்துவட்டி கும்பலின் பிடியில் சிக்கி அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்’ என்று சசிதரன் தெரிவித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், நடிகை மஞ்சுவாரியர், சசிதரன் மீது போலீஸில் புகார் செய்தார். அதில், எனது பெயருக்கு களங்கம் விளைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுவதாகவும் தன்னை மிரட்டுவதாகவும் தேவையில்லாமல் பின் தொடர்வதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், “பொய் புகாரில் கைது செய்யப்பட்டு 6 மாதம் ஆகிவிட்டது. என் உயிருக்கு ஆபத்திருப்பதாக நான் கூறிய புகாரும் இதுவரை விசாரிக்கப்படவில்லை. நான் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை படம் இயக்கப் போவதில்லை’’ என்று தெரிவித்துள்ளார் சசிதரன்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago