நடிகர் நானி, கீர்த்தி சுரேஷுடன் நடித்து வரும் படம், ‘தசரா’. ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்குகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமுத்திரக்கனி, சாய் குமார், ஜரீனா வஹாப் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் ‘தூம் தாம் தோஸ்தான்’ என்ற பாடல் தசாராவை முன்னிட்டு நாளை வெளியாக இருக்கிறது.
இதற்கிடையே இந்தப் பாடல் காட்சியில் இருந்து ஒரு போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் முரட்டு தோற்றத்தில் இருக்கிறார் நானி. இந்த தோற்றம் வைரலாகி வருகிறது. நிலக்கரிச் சுரங்கங்களில் நானி, நண்பர்களுடன் நடனமாடும் பாடலாக இது இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago