2022-ல் இதுவரை தமிழக அளவில் முதல் நாள் வசூலை குவித்த டாப் 10 படங்கள்

By செய்திப்பிரிவு

நடப்பு ஆண்டில் இதுவரை வெளியான படங்களில், தமிழக அளவில் முதல் நாளில் ரூ.36.17 கோடி வசூலித்து அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. பீஸ்ட், பொன்னியின் செல்வன், விக்ரம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தமிழ் திரையுலகில் இந்தாண்டு ஏராளாமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. சில படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டும் வருகின்றன. குறிப்பாக, நட்சத்திர நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வசூலை வாரிக் குவிப்பது வழக்கம். இன்னும் 2 மாதங்களில் 2022-ம் ஆண்டு நிறைவடைய உள்ளது. அப்படிப் பார்க்கும்போது, இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில், தமிழகத்தில் எந்தெந்த படங்கள் அதிகப்படியான முதல் நாள் வசூலைக் குவித்துள்ளன என்பது குறித்த பட்டியலைப் பார்ப்போம்.

  1. அஜித்தின் ‘வலிமை’ - ரூ.36.17 கோடி
  2. விஜய்யின் ‘பீஸ்ட்’ - ரூ.27.40 கோடி
  3. ‘பொன்னியின் செல்வன்’ - ரூ.27 கோடி
  4. கமலின் ‘விக்ரம்’ - ரூ.20.61 கோடி
  5. சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ - ரூ.15.21 கோடி
  6. ‘ஆர்ஆர்ஆர்’ - ரூ.12.73 கோடி
  7. தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ - ரூ.9.52 கோடி
  8. சிவகார்த்திகேயனின் ‘டான்’ - ரூ.9.47 கோடி
  9. விக்ரமின் ‘கோப்ரா’ - ரூ.9.28 கோடி
  10. யஷ் நடித்த ‘கேஜிஎஃப் 2’ - ரூ.8.24 கோடி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE