ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி - விக்ரம்

By செய்திப்பிரிவு

'பொன்னியின் செல்வன் பாகம் 1' படத்தில் ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த ஆக்ரோஷமான பின்னூட்ட வரவேற்புக்கு நன்றி' என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

கல்கியின் வரலாற்று புனைவு நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேற்று (செப்டம்பர்31) திரையரங்குகளில் வெளியானது. இதில் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடித்திருந்தார். படத்தில் இந்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்,''நன்றி..தேங்க்ஸ்..நன்னி..தன்யவாத்.. இப்படி எந்த மொழியில் சொன்னாலும், கேட்பதற்கும் உணர்வதற்கும் நன்றாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஆதித்த கரிகலானுக்கு கிடைத்த அந்த ஆக்ரோஷமான பின்னூட்டம் ரொம்ப நன்றி. நான் நிறைய படங்களில் நடித்திருக்கேன்; நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருக்கேன். எப்போதும் எல்லா படங்களையும், என் படம், என்னுடைய கதாபாத்திரம் என பெருமைப்படுவேன். எல்லோரும் இது எங்களுடைய படம் என கொண்டாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சி. படக்குழு உள்ளிட்டவர்களுக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்