“திரையரங்குகளில் படக் காட்சிகளை வீடியோவாக எடுத்து பதிவிடுவது தவறு” - கௌதம் வாசுதேவ் மேனன்

By செய்திப்பிரிவு

''திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்போர் 15 - 20 விநாடிகள் வரை திரைப்படத்தின் காட்சியைப் படம் படித்து, அதை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். அது தவறு'' என்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெற்றுள்ள மல்லிப்பூ பாடல் குறித்து பேசினார். அதில், ''ஒரு பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் மல்லிப்பூ பாடல் அமைந்திருந்தது. ஒரு பெண் மட்டும் தனியாக நின்று நடனமாடும் பாடலாக இல்லாமல், ஆண்களும் இடம்பெறும் வகையில் அந்தப் பாடலை எடுக்க முடிவு செய்தோம். அதனால், சிறிய அறையில் 40 ஆண்களும் இணைந்து நடனமாடும் வகையில் அந்தப் பாடலை எடுத்தோம்” என்றார்.

மேலும் பேசுகையில், “திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்போர் 15 - 20 விநாடிகள்வரை திரைப்படத்தின் காட்சியை படம் படித்து, அதை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். அது தவறு. படம் பார்க்க திரையரங்கம் வருபவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த நினைத்தால் திரையரங்கில் இருந்தவாறு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொள்ளவதில் தவறில்லை. ஆனால், படக் காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தவறான செயல். ஏனென்றால் ஒரு திரைப்படம் எடுக்க நாங்கள் நிறைய உழைப்பை, நிறைய நேரத்தை, நிறைய பணத்தை செலவிடுகிறோம்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

7 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்