மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசிக்கு தடை

By செய்திப்பிரிவு

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி தனது, ‘சட்டம்பி’ படம் தொடர்பாக, மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பெண் பத்திரிகையாளரின் ஒரு கேள்விக்கு எரிச்சலடைந்த அவர், அவரையும் அந்த சேனல் குழுவினரையும் ஆபாசமாகத் திட்டி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி மராடு போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து ஸ்ரீநாத் பாசி மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட யூடியூபர் கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் ஸ்ரீநாத் மீது புகார் அளித்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. அவர் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட படங்கள் தவிர, மற்ற படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்