அனிருத்தின் தாத்தாவும், இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் காலமானார்

By செய்திப்பிரிவு

இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தாவும், திரைப்பட இயக்குநரும், இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87,

நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரமணன், பல்வேறு மேடை நாடகங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.எண்ணற்ற வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். மேலும், தூர்தர்ஷனுக்காக பல்வேறு சீரியல்களையும், பல ஆவணப்படங்களையும் இவர் எடுத்துள்ளார். எஸ்.வி.ரமணனுக்கு திருமணமாகி லஷ்மி, சரஸ்வதி என இரு மகள்கள் உள்ளனர். இதில் லஷ்மியின் மகன் இசையமைப்பாளர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1983-ம் ஆண்டு ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி நடிப்பில் வெளியான ‘உருவங்கள் மாறலாம்’ என்ற திரைப்படத்தை இயக்கி, இசையமைத்திருந்தார் எஸ்.வி.ரமணன். இப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் சிவாஜி கணேசன், ரஜினி, கமல்ஹாசன், ஜெய்சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கில் ‘துரை பாபு ஷோபனம்’ என்ற படத்தையும் இவர் இயக்கினார், அது வெளியாகவில்லை. 1966-ல் ஜெயகாந்தன் இயக்கத்தில் வெளியான ‘யாருக்காக அழுதான்’ படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலை அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெற இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்