‘பொ.செ.1’ முதல் ‘நானே வருவேன்’ வரை - இந்த வார தியேட்டர் ரிலீஸில் 5 முக்கியப் படங்கள்

By செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து பார்ப்போம். குறிப்பாக வார விடுமுறையைத் தொடர்ந்து ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை விடுமுறை தினங்கள் வரவுள்ளதால் முக்கியமான படங்கள் திரையிரங்குகளில் வெளியாகவுள்ளன.

'பொன்னியின் செல்வன் பாகம் 1’ - எழுத்தாளர் கல்கியின் வரலாற்று நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கும் படம் 'பொன்னியின் செல்வன் பாகம்1'. பான் இந்தியா முறையில் உலகம் முழுவதும் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். லைகாவுடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. படம் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘நானே வருவேன்’ - செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்துஜா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு அவரே கதையும் எழுதியிருக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். படம் வரும் செப்டம்பர் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘விக்ரம் வேதா’ (இந்தி): கடந்த 2017-ம் ஆண்டு புஷ்கர் காயத்ரி எழுதி இயக்கி தமிழில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. இந்தப் படம் இந்தியிலும் அதே பெயரில் ரீமேக்காகிறது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரியே இந்தியிலும் இயக்குகிறார். ஹ்ரித்திக் ரோஷன், சயீஃப் அலிகான், ராதிகா ஆப்தே நடிக்கும் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் ரூ.175 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

'சாட்டர்டே நைட்' (மலையாளம்): நிவின் பாலி, அஜூவர்கிஸ் நடிக்க ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் படம் 'சாட்டர்டே நைட்' (Saturday Night). ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

'நேனு நுவ்வு' (தெலுங்கு): சாகா ரெட்டி தும்மா இயக்கத்தில், தன்ராஜ், ரத்னா கிஷோர் நடித்துள்ள படம் 'நேனு சன்ஆஃப் நுவ்வு' (Nenu C/o Nuvvu). ரகுநாதன் இசையமைத்துள்ள படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்