சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’: வெளியானது முதல் சிங்கிள் பாடலின் வீடியோ

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகை சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘டுமங்கா’ பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. அது சன்னி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றுள்ளது.

நடிகை சன்னி லியோன் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். அதில் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படமும் ஒன்று. இந்த படம் VAU மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோ பேனரில் உருவாகி வருகிறது. வீரசக்தி மற்றும் சசிக்குமார் இணைந்து தயாரித்து வருகின்றனர். ஆர்.யுவன், எழுதி இயக்குகிறார். ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் சன்னி லியோனுடன் நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக், ரவி மரியா, மொட்ட ராஜேந்திரன், தங்கதுரை, பாலா, ஜி.பி.முத்து ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் இடம் பெற்றுள்ள ‘டுமங்கா’ பாடலின் வீடியோ வடிவத்தை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை பா.விஜய் எழுதி உள்ளார். கானா சேட்டு மற்றும் கானா மாஸ் மணி ஆகியோர் இந்த பாடலை பாடி உள்ளனர். சுமார் 3.09 நிமிடங்கள் ஓடும் இந்த பாடலில் சன்னி லியோன் அசத்தல் நடனமாடி உள்ளார்.

வீடியோ பாடலை பார்க்க...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்