விஜய் நடிக்கும் 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் படத்தில், மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் இந்தபடத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத்தில் மாறி மாறி நடைபெற்றது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதிக்குள் முடிவடையும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக படத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், ''வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று நடைபெறுகிறது. அதில் இன்னும் 2 பாடல்களும், 2 சண்டை காட்சிகளும் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீசாகும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» 6 பூகம்பங்களை கடந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில் - சோழர்கள் பெருமை பேசிய விக்ரம்
» பொன்னியின் செல்வன் பாடல் அனுபவம் 6 | தேவராளன் ஆட்டம் - அரச குடும்பத்தில் பலி கேட்கும் ஆட்டம்
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago