கூத்துக் கலையில் போதிய வருமானம் இல்லாததால், வெளிநாடு சென்று சம்பாதிக்க ஆசை கொள்கிறார், குமரன் (வைபவ்). அவர் நண்பர் முத்தையா (ஆத்தங்குடி இளையராஜா)வும் அப்படியே. அதற்குப்பணம் தேவை என்பதால், தற்காலிகமாக ஒருவரிடம் லாரி டிரைவராக வேலைக்கு சேர்கின்றனர். உப்பு லாரிக்குள் போதைப் பொருள் இருக்க, போலீஸில் சிக்கி, சிறைக்குச் செல்லும் வழியில் தப்பிக்கிறார்கள். அவர்கள் தப்பித்தது எப்படி? தாங்கள் போலீஸில் சிக்க காரணமாக இருந்த போதைப் பொருள் கும்பல் எது? போலீஸ் அவர்களை கண்டுபிடித்ததா? என்பதுதான் படம்.
போதைப் பொருள் கடத்தல், அதற்குப்பின்னுள்ள அரசியல் நெட்வொர்க், தலைவர்களின் ஈகோ, இலங்கை அகதிகளின் நிலை, கடத்தல் வழக்குகளில் சிக்கும் அப்பாவிகளின் தவிப்பு என தென் தமிழககடலோரப் பகுதிகளின், பல்வேறு விஷயங்களைப் பேச முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அசோக் வீரப்பன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
கூத்துக் கலைஞரின் மகனாக வரும்வைபவுக்கு சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட அப்பாவி இளைஞன் கேரக்டர். ஆக்ஷன் காட்சிகளில் ஆவேசம் காட்டும் அவர், மற்ற இடங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வழக்கம்போலவே, தவறுகிறார். அவரும் அவர் தோழன் ஆத்தங்குடி இளையராஜாவும் சில இடங்களில் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார்கள்.
புலம் பெயர் பெண் அனேகாவுக்குத் தன்னை நேசிக்கும் நாயகனுக்கு உதவும் பாத்திரம். கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். அவருடைய இலங்கைத் தமிழ் வழக்கில் இன்னும் கவனம் செலுத்திஇருக்கலாம். எந்த அலட்டலும் இல்லாமல், இயல்பான போலீஸ் அதிகாரியாக, தமிழரசன் கவனம் ஈர்க்கிறார். அவரின் உயர்ந்த தோற்றமும் அமைதியானபேச்சும் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை இயல்பாகக் காட்டுகிறது.
சிறிது நேரமே வந்தாலும் திரையை அழுத்தமாக ஆக்கிரமிக்கிறார் ஜோஜு ஜார்ஜ். அவருடைய மிகையில்லாத நடிப்பும் உடல் மொழியும் அழகாக ரசிக்க வைக்கின்றன. ஆடுகளம் நரேன், வ.ஐ. ச. ஜெயபாலன் உள்ளிட்டோர் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணனின் இசையும்பாடல்களும் கதைக்குப் பலம் சேர்க்கின்றன. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவில் ராமேஸ்வரம் பகுதிகளின் கடல் காட்சிகள் ஈர்க்கின்றன.
எதிலும் முழுமை இல்லாத திரைக்கதையின் தடுமாற்றம் ஆங்காங்கே தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை. வைபவுக்கும் நாயகிக்குமான காதல் காட்சிகள் திணிக்கப்பட்ட செயற்கை. இதுபோன்ற குறைகளைச் சரி செய்திருந்தால், இந்த சீரியஸ் ‘பபூன்’ இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago