நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படப் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத் தொடர்ச்சி மலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யுப் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், படத்தின் பூஜை இன்று படக்குழுவினருடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago