அஜித்தின் ‘துணிவு’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு

By செய்திப்பிரிவு

நடிகர் அஜித்குமார் நடிக்கும் 'துணிவு' படத்தின் இரண்டாம் பார்வை வெளியாகியுள்ளது.

'வலிமை' படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார். போனிகபூர் தயாரிக்கும் படத்தில் அஜித் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். அவர் தவிர 'சார்பட்டா பரம்பரை' படத்தில் கலக்கிய ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்ற பலர் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெறவுள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாக கூறப்படும் சூழலில், படத்தின் முதல் பார்வையும் தலைப்பும் நேற்று மாலை வெளியானது.

படக்குழு வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தில் துப்பாக்கி வைத்துக் கொண்டு கூலாக தாடி மற்றும் மீசையுடன் காட்சி அளிக்கிறார் அஜித். பின்னணியில் ரூபாய் நோட்டுகளில் இருப்பது போன்ற லே-அவுட்டில் படத்தின் தலைப்பு ‘துணிவு’ என இடம்பெற்றுள்ளது. அதன் கீழ் ‘No Guts No Glory’ என குறிப்பிடப்பட்டுள்ளது. படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதால் படத்தின் தலைப்புக்கான எழுத்து பணத்தாள்களில் குறிப்பிடப்படும் எழுத்தை ஒட்டியுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது படத்தின் இரண்டாம் பார்வை வெளியாகியுள்ளது. முன்னதாக படப்பிடிப்பின்போதே வெள்ளை தாடியுடன் கூலிங்க்ளாஸ் அணிந்த அஜித் தோற்றத்துடன் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகின. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இரண்டாம் பார்வையும் அதையொட்டியே உள்ளது. படத்தின் அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இரண்டு போஸ்டர்கள் வெளியானது மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்