பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நந்தினி மற்றும் அவரது ஊமை தாய் மந்தாகினி தேவியாக வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் தடபுடலாக வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. இந்த மாத இறுதியில் திரைக்கு வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளில் பான் இந்தியா படமாக கலக்க வருகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என நட்சத்திரங்கள் பலரும் குழுமியுள்ள இந்த படம் சோழ வம்ச வரலாறு பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவானதாகும். பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் இந்த நாவலை படமாக்க பல தலைமுறை நடிகர்கள் முயற்சித்து விட்ட நிலையில் தற்போது இதனை நனவாக்கி உள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
படம் திரைக்கு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் படம் குறித்தான அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராய் நந்தினி வேடத்தில் நடித்துள்ள ரோலுக்கு வேறொரு நடிகையை தன் முதலில் மணிரத்தினம் ஒப்பந்தம் செய்தாராம். பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் ஐஸ்வர்யாராய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நந்தினி மற்றும் அவரது ஊமை தாய் மந்தாகினி தேவியாக வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
» Chhello Show: இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்படும் குஜராத்தி திரைப்படம்
» பொன்னியின் செல்வன் பாடல் அனுபவம் 2 | சோழா சோழா - போர்க்களத்தில் துளிர்க்கும் நந்தினியின் நினைவுகள்
முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாபாத்திரம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பழிவாங்கும் முகம் அழகானது என்ற தலைப்புடன் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தில் பழுவூர் ராணியாக இவர் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க ரேகாவை தான் முடிவு செய்து இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் மணிரத்தினம் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
28 mins ago
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago