'படம் பார்ப்பதற்கு முன்பு நன்றாக தூங்கிவிட்டு வாருங்கள்' என நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. அதனால் எதாவது பேசினால் தவறாகிவிடுகிறது'' என்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ''எதாவது பேசுனா தப்பாகிவிடுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் 'நல்லா தூங்கிட்டு வாங்கன்னு' சொன்னதை எடுத்து பெரிதாக்கி அதை சமூக வலைதளங்களில் பரப்பி, தயாரிப்பாளர் நேர்காணலில் கூட, 'என்னா சார் உங்க இயக்குநர் இப்படி சொல்லிருக்காரு' என கேட்டு அவர் என்னிடம் 'என்னா சார்' என்று கேட்டு தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது.
நான் பொதுவாக ஒரு விமானத்தில் பிரயாணம் செய்யப்போகிறேன் என்றால், என் தாயார் என்னிடம் 'சீக்கிரம் தூங்குடா' என அறிவுறுத்துவார். அதுபோல அந்த அர்த்தத்தில் நான் சொன்னேன். எந்த அளவுக்கு எதை சொல்வதென்று தெரியவில்லை. என்னுடைய மற்ற படங்களைக் காட்டிலும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்மறை விமர்சனங்களிலிருந்தும் எடுத்துக்கொள்கிறேன். நன்றி.
ஒரு படம் பண்ணுவது மிகவும் சிரமமானது. ஒரு நடிகரை வரவழைத்து, அவருக்கு கதை புரியவேண்டும். அவருக்கு ஏற்ற வகையிலான விஷயங்கள் படத்தில் இருக்காது எனும்போது அவரிடம் சொல்வதே பயமாக இருக்கும். சிம்பு போன்ற ஒருவரிடம் எனக்கு அந்த பயம் இருக்கவில்லை. நான் அவரிடம் சொன்னதும் அவர் படம் பண்ணலாம் என்றார். தயாரிப்பாளரிடம் படத்தின் கதையை சொல்லி, பிறகு ஒரு குழுவை ஒருங்கிணைத்து, அதை உருவாக்கி படப்பிடிப்பு வரை கொண்டு வந்து, படப்பிடிப்பு நடத்தி, படத்தொகுப்பில் பல தடைகளை கடந்து, ஒரு படத்தை வெளியிடுவது அவ்வளவு எளிதானதல்ல. தயாரிப்பாளர் அனைத்து திரையரங்குகளில் வெளியிட்டாளர்களிடம் பேசி படத்தை வெளியிடுவது எத்தனை சிரமமானது என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன். அப்படி படத்தை மக்களிடம் படத்தை கொண்டு சேர்த்ததற்கு நன்றி.
» 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன் - கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வென்ற பெண்
» அஜித் என் பார்வையை முற்றிலுமாக மாற்றிவிட்டார் - பைக்கரின் வைரல் பதிவு
'மல்லிப்பூ' பாடல் ஜெயமோகன் மற்றும் என்னுடைய ஸ்கிரிப்டில் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான்தான் இந்த இடம் நன்றாக இருக்கிறது. இங்கே ஒரு அழகான பாடலை பொருத்த முடியும் என்றார். பின்னர் நான் அந்த சீனை பாட்டுடன் எழுதினேன்'' என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago