'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தவர் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். அவரது நடிப்பும், கெட்டப்பும், ஜாக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரத்தின் பெயரும் அவருக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி கொடுத்தது. இவர் கடந்த 2015-ம் ஆண்டு நடிகை ஆம்பர் ஹெர்ட்டை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த நிலையில், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஆம்பர் ஹெர்ட் எழுதிய கட்டுரை பூதாகரமாக வெடித்தது.
அதில் அவர், திருமண உறவில் தான் வன்முறையால் பாதிக்கப்பட்டேன் என்று கூறியிருந்தார். அந்தக் கட்டுரை, தன்னையும் தன் தொழிலையும் பாதித்ததாகக் கூறி, 50 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்குத் தொடுத்தார் ஜானி டெப். ஆம்பர் ஹெர்ட்டும் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் முடிவில் ஜானி டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. முன்னதாக, இந்த வழக்கு ஹாலிவுட் மட்டுமில்லாமல் உலகளவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட வழக்கமாக அமைந்தது.
காரணம், கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு முன் தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முதலே தீவிரமாக நடைபெற்றது. அப்போது, இரு தரப்பிலும் ஏராளமான வாதங்களும் சாட்சிகளும் முன்வைக்கப்பட்டன. உலகம் முழுவதும் பல யூடியூப் சேனல்கள் இந்த வழக்கின் விவாதத்தை லைவ் டெலிகாஸ்ட் செய்தன. இதனால் இந்த வழக்கின் விவாதங்கள் கவனம் ஈர்த்தன.
இதனிடையே, இந்த வழக்கு 'Hot Take: The Depp/Heard Trial' என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகவுள்ளது. பிரபல ஃபாக்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான அமெரிக்கன் ஓடிடி தளம் இந்த படத்தை வெளியிடவுள்ளது. சந்தா இல்லாமல், இந்தப் படத்தை இலவசமாக பார்க்கலாம் என்று ஃபாக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படத்தில் ஜானி டெப் கதாபாத்திரத்தில் 'பேரலல்ஸ்', 'டேஸ் ஆஃப் அவர் லைவ்ஸ்' போன்ற படங்களில் நடித்த மார்க் ஹாப்கா என்பவர் நடிக்கிறார். மேகன் டேவிஸ் என்பவர் ஆம்பர் ஹெர்ட் பாத்திரத்தில் நடிக்கிறார். அமெரிக்காவின் முன்னணி டிவி நடிகர்கள் இருதரப்பின் வழக்கறிஞர்களாக நடிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. படம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. எனினும் இந்தியாவில் வெளியாவது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
40 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago