தமிழ்த் திரை உலகில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பாட்டுள்ளதாக இயக்குநர் கே.பாக்கியராஜ் வேதனை தெரிவித்துள்ளார்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், ''மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தால் எம்.ஜி.ஆர் புரட்சி நடிகராகவும், சிவாஜி நடிகர் திலகமாகவும் உருவாக முடிந்தது. எனக்கு தனிப்பட்ட முறையில் அவர் எழுத்தை அதிகம் ரசிப்பவன், என்னுடைய எழுத்தை அதிகம் மதிக்கும் அவர் உடனான நட்பு நீண்டகாலமாக இருந்தது.
அதேபோல் கருணாநிதி, எம்.ஜி ஆர் ஆகிய இருவர் நிகழ்விலும் சமமாக பங்கேற்றவன் நான். தமிழ்த் திரையை பொறுத்தவரையில் அனைவரும் உச்சரிக்கும் பெயர் கருணாநிதி பெயர்.
சங்கத் தேர்தலுக்கு உறுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி. சமீபகாலமாக எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. கதை இலாகா என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால் அதை நோக்கி சில இயக்குநர்கள் படம் எடுக்கின்றனர், வெற்றிமாறன் போன்றோர் நாவலை மையப்படுத்தி சிறப்பான படங்களை எடுகின்றனர். தமிழ்த் திரை உலகில் எழுத்தாளர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான். தமிழ் நடிகர்கள் படங்கள் ஆந்திராவிலும் இந்தியிலும் அதிகம் ஓடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago