‘பாய்காட் பாலிவுட்’ போக்கு நல்லதுதான் - ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர்

By செய்திப்பிரிவு

'பாய்காட் பாலிவுட்' ட்ரெண்ட் நல்லதுதான் என ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகிற்கு பெரும் தலைவலியாக அமைந்திருப்பது இந்த 'பாய்காட்' ட்ரெண்ட். நடிகர்களோ, படத்தின் இயக்குநரோ எப்போது தெரிவித்த கருத்தை அடிப்படையாக கொண்டு, அல்லது அவர்களின் செயல்பாடுகளை கொண்டு அவர்கள் சார்ந்த படங்கள் வெளியாகும்போது படத்தை புறக்கணிக்க கோருவதுதான் 'பாய்காட்' ட்ரெண்ட். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ‘பாய்காட் பாலிவுட்’ என்ற நெட்டிசன்களின் ட்ரெண்டிற்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய விவேக் அக்னிஹோத்ரி, “பாய்காட் பாலிவுட் என்ற ட்ரெண்டிங் மிகவும் சிறப்பான ஒன்று. காரணம் பாலிவுட்டின் உள்ளட்டக்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியை இது வெளிப்படுத்துகிறது. இந்தப் போக்கின் இறுதி முடிவு மிகவும் சாதகமாக இருக்கும்'' என்றார். மேலும் அவரிடம், 'இந்த பிரசாரங்கள் வலதுசாரிகளின் ஒருங்கிணைந்த தாக்குதல்களா?' என்ற கேட்டபோது, ‘இது பாலிவுட்டுக்கு எதிரான கலாசார கிளர்ச்சியின் வடிவம்’ என அவர் பதிலளித்தார்.

முன்னதாக, ஆமீர்கான் நடிப்பில் அண்மையில் வெளியான 'லால் சிங் சத்தா' திரைப்படம் 'பாய்காட்' ட்ரெண்டிங்கால் கடும் சரிவைச் சந்தித்தது. அதேபோல, அக்‌ஷன் குமார் நடிப்பில் வெளியான 'ரக்‌ஷா பந்தன்’ உள்ளிட்ட படங்கள் 'பாய்காட்' ட்ரெண்டால் களமாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE