வைபவ், ஜோஜு ஜார்ஜ், ஆத்தங்குடி இளையராஜா காம்போ - ‘பபூன்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள ‘பபூன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அழுத்தமான வசனங்கள் கொண்டு வெளியாகியுள்ள ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் ‘பபூன்’. இயக்குநர் அசோக் வீரப்பன், கார்த்திக் சுப்பராஜிடம் ‘பீட்சா’ (2012), ‘ஜிகர்தண்டா’ (2014) படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார்.

முன்னதாக ஜோஜு ஜார்ஜ், கார்த்திக் சுப்பராஜின் 'ஜெகமே தந்திரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். மேலும், கிராமத்து பாடல்களால் கவனம் பெற்ற அந்தக்குடி இளையராஜா படத்தில் நடித்துள்ளார். வைபவ்வுக்கு ஜோடியாக ‘நட்பே துணை’ நாயகி அனகா நடித்துள்ளார். தவிர நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிக்கும் முனைப்பிலிருக்கும் நாயகன் வாழ்க்கையில் பிரச்சினை குறுக்கிட, அதை அவர் எப்படி சமாளித்தார் என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்பதை ட்ரெய்லர் மூலம் யூகிக்க முடிகிறது. 'தண்டிக்கனும்னா மட்டும் இவ்ளோ செக்‌ஷன் தேட்றீங்களே... எங்களுக்கு என்னென்ன உரிமை இருக்குன்னு உங்க சட்டம் சொல்லுது தெரியுமா சார்', 'போராடணும்னு தோணலன்னா ஏன் வாழணும்' போன்ற வசனங்கள் படத்தின் அழுத்தத்தை உணர வைக்கிறது.

க்ரைம் - த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜின் தோற்றம் ஈர்க்கிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழின் காவல் துறை கதாபாத்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள படம் வரும் செப்டம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்