மாரி செல்வராஜ் - உதயநிதியின் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு நிறைவு 

By செய்திப்பிரிவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது. விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE