நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளுடன் திருமணம் - முனிஸ்ராஜா விளக்கம்

By செய்திப்பிரிவு

பிரபல வில்லன் நடிகர் சண்முகராஜாவின் தம்பி, முனிஸ் ராஜா. ‘நாதஸ்வரம்’ தொடர் மூலம் பிரபலமான இவர், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவரும் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியாவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண், தனக்கு நயினார் முஹம்மது என்ற மகனைத் தவிர வேறு பிள்ளைகள் கிடையாது என்றும் ஒரு வளர்ப்பு மகள் இருந்தார், அவரை சீரியல் நடிகர் வசப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் முனிஸ்ராஜா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, நானும் பிரியா நாச்சியாரும் காதலித்துப் பதிவு திருமணம் செய்து கொண்டோம். இரு வீட்டார் சம்மதத்துடன் அழைப்பிதழ் கொடுக்க நினைத்தேன். ஆனால் எங்கள் திருமணம் பற்றி தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. விரைவில் இருவீட்டு பெரியவர்கள் சம்மதத்துடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும். இந்தச் செய்தி கேட்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்