‘சிறுத்தை’ சிவா - சூர்யா கூட்டணியில் ‘சூர்யா 42’ மோஷன் போஸ்டர் வெளியீடு

By செய்திப்பிரிவு

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் தலைப்பிடப்படாத புதிய படத்தில் நடிக்கிறார் சூர்யா. 'சூர்யா42' என அழைக்கப்படும் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நாயகியாக நடிக்கிறார். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ள படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வடிவில் தற்போது வெளியாகியுள்ளது.

மோஷன் போஸ்டரை பொறுத்தவரை படம் மன்னர் கால கதையை அடிப்படையாக கொண்டு போர், வீரம், உள்ளிட்ட அம்சங்களுடன் உருவாக இருப்பதாக தெரிகிறது. பிரமாண்ட செட்டுகள் அமைத்து வரலாற்று பின்னணியில் படத்தின் கதை இருக்கும் என யூகிக்க முடிகிறது. இருப்பினும், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் மோஷன் போஸ்டரை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE