கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹசன் இணைந்து படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். ட்ரெய்லர் குறித்து நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றிலிருந்து...
தளபதி ரிஷி: பொன்னியின் செல்வன் ட்ரெய்லர்ல விக்ரம் அறிமுகம் சூப்பர்... ரகுமான் எனும் இசை அரசன்..
உளவாளி: பொன்னியின் செல்வன் பாக்குற ஆர்வமே இல்ல முன்ன. ட்ரைலர் பாத்ததும் கொஞ்சம் பிராமிஸ்ஸிங்கா தெர்து...
» 'பாரத் சோடோ யாத்திரை'தான் நீங்கள் நடத்த வேண்டும்: ராகுலை கிண்டல் செய்த அண்ணாமலை
» யார் பிளவு சக்தி? - ராகுல் பயணத்தை விமர்சித்த அண்ணாமலைக்கு ப.சிதம்பரம் பதிலடி
தகடூர் அஜித்குமார்: இலங்கை என்ற வார்த்தையை பொன்னியின் செல்வன் படத்திலிருந்து நீக்கி இருக்கலாம். அது தேவையற்றது.. உண்மையான வரலாறும் அல்ல...
DESPOTER: பொன்னியின் செல்வன் இந்தியா லெவல் பிளாக் பஸ்டர் அடிக்கும். எழுதி வெச்சிக்கோங்க...
ஆஃப்கான்: பொன்னியின் செல்வன் டிரைலர், டீசர் கடைசில வர அந்த ஹம்மிங்... உண்மைலயே ஏதோ பண்ணுது.
thanveer: எல்லா சரி அந்த ஜெயம் ரவி வாய்ஸ் மட்டும் குழந்தை மாதிரியே இருக்கே...
பெரியார்_ஊரான்: ஐஸ்வர்யாவ மட்டும் மாத்தி இருக்கலாமோ தோணுது
Vayalaal2.0: பொன்னியின் செல்வன் இசை நல்லா இருக்கு. அங்க அங்க திரிஷா, கார்த்தி தமிழ் கொஞ்சம் செட் ஆகாத மாதிரி ஒரு உணர்வு...
புத்த_போதி_கயா: ஆயிரம் மடங்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.,, மாபெரும் சகாப்தத்தை காண.,,,
6.0: வந்தியதேவன் கேரக்டர விஜய், சிகா ரெண்டு பேர்ல ஒருத்தர் பண்ணி இருக்கலாம்...
Social Animal: பொன்னியின் செல்வன் புத்தகத்துல ஈழம்னு தானே வரும் இதுல என்ன இலங்கைனு வருது.
Kasi காசி: பொன்னியின் செல்வன் படம் வருதாமே. புத்தகம் படிச்சவங்களை விட நம்ம போல படிக்காதவங்களுக்கு தான் இது நல்லா இருக்கும்னு நான் சொல்றேன். ரெண்டு கடிகாரத்தை வச்சு மணி பார்த்தவன் நிலைமை அவங்களுக்கு..
ராட்ஸ்: அருண்மொழி வர்மனுக்கு அதர்வா போட்டு இருக்கலாம். அந்த கேரக்டருக்கான வயசு, உடல் வாகு, குறும்பு, அவனுக்கு செட் ஆகிருக்கும். நந்தினி, கரிகாலன், நம்பி .. சூப்பர், கார்த்தி ஒட்டவில்லை. பூங்குழலி -க்கு அஞ்சலி நல்ல சாய்ஸா இருந்திருப்பார்.
Cable Sankar: பொன்னியின் செல்வன் ட்ரைலர் எனக்கு பிடித்திருந்தது. கருப்பாய் முகத்தில் பெயின்ட் அடித்த பெண், கார்த்தியைப் பார்த்து கத்துமிடத்தில் கார்த்தியும் கத்தும் காட்சியைத் தவிர. மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
சினிமா
42 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago