சென்னை: “தளபதி படத்தில் எனக்கு பதிலாக கமலை நடிக்கவைக்க பார்த்தார்கள்” என்று ‘பொன்னியில் செல்வன் பாகம் 1’ ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து ‘பொன்னியின் செல்வன்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும்போது, “தளபதி படம் பண்ணும்போது நடந்த சில விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அப்போது இந்தி படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அதன் பிறகு இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்தேன்.மணி சாருடன் முதல் காம்பினேஷன். முதல் நாள் படபிப்புக்குச் சென்று, நல்லா பளிச்சின்னு மேக்கப் போடச் சொன்னேன். ஏன்னா, மம்முட்டி ஆப்பிள் நிறம் போல் இருப்பார்... நான் கருப்பாக இருந்தேன். என் ஸ்டைலில் மேக்கப் போட்டுக் கொண்டு காஸ்ட்யூமைக் கொண்டு வரச் சொன்னேன்.
எனக்கு லூசா பேன்ட், பனியன், செப்பல் கொடுத்தார்கள். அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி... நான் வழக்கமாக அணியும் பேன்ட், சர்ட் அப்புறம், நான் போட்டிருந்த வாக்கிங் ஷூ அணிந்துகொண்டு படபிடிப்பு தளத்துக்குப் போனேன். மணி சார் என்னை பார்த்ததும், ‘என்ன இன்னும் டிரஸ் சேஞ்ச் பண்ணலையா. பண்ணிட்டு வந்திருங்க’ன்னு சொன்னார். ‘மாத்தியாச்சி சார்... இதுதான்’னு என்று சொன்னேன். அவரும் சரின்னு சொல்லிட்டு, அவர் டெக்னீஷியன்ஸ் கூட டிஸ்கஸ் பண்ணிகிட்டிருந்தார். ரொம்ப நேரமாச்சி... வெயிட் பண்ணிகிட்டே இருந்தேன். ஷூட்டிங் ஆரம்பிக்கவே இலை.
முதல் நாள் ஷூட்டிங் ஷோபனாக் கூட. ஷோபனா எல்லாரையும் கலாய்க்கிற பார்ட்டி. அவங்ககிட்ட கேட்டா சரியா தெரியும் என்று நினைத்து, என்ன நடக்குது... இன்னும் ஒரு காட்சி கூட ஆரம்பிக்கவே இல்லைன்னு கேட்டேன். அவங்க விசாரிச்சிகிட்டு வந்து.. என்னாச்சு, டைரக்டருக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்னையா..? இன்னைக்கு ஷூட்டிங் முதல் நாள்... வந்ததுக்கு ஷூட்டிங் முடிச்சி அனுப்பி வைச்சிகிட்டு... அப்புறம் ஹீரோவா கமலை போட்டுடலாம்ன்னு பேசிகிட்டிருக்காங்கன்னு சொன்னதும்... அப்பதான் புரிஞ்சது... நம்ம இஷ்டத்துக்கு மேக்கப்பும் டிரஸ், ஷூவெல்லாம் போட்டு கிட்டு வந்ததுன்னு தெரிஞ்சது. முதல் நாளே என்கிட்ட இதெல்லாம் சொல்லி எப்படி புரியவைக்க... அதுக்கு ஹீரோவை மாத்திடலாம் என்பதை மணி சொல்ல கேள்விபட்ட பிறகு , அப்புறம் போய் அவங்க சொன்னபடி எல்லாத்தையும் மாத்தி கிட்டு வந்து நடிச்சேன். அப்படி மணி சார் ஒரு கண்டிஷனான இயக்குநர்.
» பாடநூல் கழகம் திறக்கும் வாசிப்பின் வாசல்
» நீட் தேர்வு முடிவுகள் | மாணவர்களைக் கடிந்து கொள்ள வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்
இப்படி மூணு நாள் ஷூட்டிங் போய்கிட்டிருக்கு. நம்ம எப்பவுமே ஒவ்வொரு காட்சியிலுமே எப்படி நடிக்கணும்ன்னு ஒரு 'டெம்ப்ளேட்' வெச்சுருப்போம். இதிலேயும் அப்படிதான் நடிச்சிகிட்டிருந்தேன். ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தேன். இன்னும் ஃபீல் கொடுங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிகிட்டேயிருந்தார். இதுக்க மேல என்ன ஃபீல் பண்ண.. நாமதான் ஒரு டெம்ப்ப்ளேட் வைச்சிருக்கோமே... அப்படிதான் நடித்து முடிச்சேன். நான் அப்போ நடிச்சிகிட்டிருந்ததெல்லாம், தூக்குடா.. அடிடா... அப்படிதான். எப்படியோ அன்னைக்கு ஷூட்டிங் முடிந்தது. தினமும் இது இப்படியே போய்கிட்டிருந்தா சரியா வராதுன்னு நினைச்சி... கமலுக்கு போன் பண்ணி... 10 டேக்... 12 டேக்கெல்லாம் எடுக்கிறாரு.. இன்னும் கொஞ்சம் ஃபீல் பண்ணி நடிக்க சொல்றாரு... அப்படி நடந்ததை எல்லாம் சொன்னேன். மணி படம் நீங்க நடிக்கும்போதே நான் நினைச்சேன். சரியா மாட்டுனேங்களா.. மணிகிட்ட நான் எவ்வளவு அனுபவிச்சிருப்பேன்... அப்படின்னார்.
சரி, இப்போ என்ன பண்ணலாம்ன்னு கேட்டேன். ஒண்ணு பண்ணுங்க... எப்படி நடிக்கணும்ன்னு அவரையே நடிச்சி காட்ட சொல்லி, அதை அப்படியே மனசுல ஏத்திகிட்ட மாதிரி பொய்யா அதை அப்படியே நடிச்சிருங்க என்று சொன்னார். நானும் கமல் சொன்னது மாதிரி மணிகிட்ட நடிச்சி காட்ட சொல்லி... அதை அப்படியே தம் பிடிச்சுகிட்டு அங்க இங்குமா நடந்து கிட்டு... பெருசா ஃபீல் பண்ணின மாதிரி பொய்ய சொல்லி தான் மணிகிட்ட நடிச்சு முடிச்சேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago