சென்னை: 'பொன்னியின் செல்வம் பாகம் 1' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து வெளியிடுகின்றனர் என்று லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6-ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். அண்மையில் வெளியான படத்தின் டீசரும், 'பொன்னி நதி பாக்கணுமே' பாடலும், அதன்பின்னர் வெளியான 'சோழா சோழா' பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.இந்நிலையில், இந்தப் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிட உள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள மோஷன் போஸ்டரில், செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்வில், ரஜினி மற்றும் கமல் ஆகியோர் இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிடவுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago