யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஷூ’. கல்யாண் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லீ, பாலா உள்பட பலர் நடித்துள்ளனர். நிட்கோ ஸ்டுடியோ சார்பில் கார்த்தி, நியாஸ், ஏடிஎம் நிறுவனம் சார்பில் மதுராஜ் தயாரித்துள்ளனர். சாம் சி.எஸ்.இசையமைத்துள்ளார்.
இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நக்கீரன் கோபால், நடிகைகள் சஞ்சிதாஷெட்டி, கோமல் சர்மா, ஷீலா ராஜ்குமார், தயாரிப்பாளர் மதியழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் கே.பாக்யராஜ் பேசியதாவது:
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் பற்றி பேச வேண்டாம் என்று நினைத்தேன். இந்தச் சங்கத்துக்காக நான் என்ன செய்தேன் என்பதற்கு அத்தாட்சி, என் மனசாட்சிதான். நான்கு வருடமாக நான் தேர்தலே நடத்தாமல் இருப்பதாகச் சிலர் சொல்லி இருக்கிறார்கள்.
‘சர்க்கார்’ படக் கதை பிரச்னையில் நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றபின்,நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றேன். இப்போது எதிரணியில்இருப்பவர்கள், கொஞ்ச நாள் பதவியில் இருங்கள், பிறகு தேர்தல் நடத்திக் கொள்ளலாம் என்றார்கள்.
» ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் பார்த்து பா.ரஞ்சித்தை பாராட்டிய ரஜினிகாந்த்
» ‘நட்சத்திரம் நகர்கிறது’ சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது: பா.ரஞ்சித்
அதனால்தான் பதவியில் தொடர்ந்தேன். பிறகும்தேர்தல் நடத்தலாம் என்றேன்.நான் எப்போதெல்லாம் அப்படிசொல்வேனோ, அப்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்தவர்கள், எதிரணியில் இருப்பவர்கள்தான். இவர்கள் தவறாக இப்போது என்னை குறை சொல்கிறார்கள்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago