சென்னை: இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் பல்வேறு தரப்பட்ட மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
துஷாரா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகரான ரஜினிகாந்த் இன்று பார்த்துவிட்டு இயக்குனர் பா.ரஞ்சித்தை அழைத்து, தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
"உங்கள் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது படம்தான். நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் என அனைத்தும் மிகச்சிறப்பு. எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு, நான் மிகவும் ரசித்தேன்.
குறிப்பாக எனது ஆரம்பகால நாடக வாழ்க்கையையும் எனக்கு ஞாபகப் படுத்தியது இந்த படம். நாடக நடிகராக என்னால் இந்த படத்தில் எளிதாக ஒன்றிப்போக முடிந்தது” என தனது நாடக கால வாழ்வின் நினைவுகளையும் ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.
» The King is Back | பாகிஸ்தானுக்கு எதிராக 60: கோலியை போற்றும் ரசிகர்கள்
» IND vs PAK | அரை சதம் விளாசிய கோலி: பாகிஸ்தானுக்கு 182 ரன்கள் இலக்கு
படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துகள் என்றும் ரஜினிக்காத தெரிவித்துள்ளார். ரஜினியின் பாராட்டுக்கு காரணமாக படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
“நமது சூப்பர் ஸ்டாரின் பாராட்டுகள் என்னை வெகுவாக கவர்ந்தது” என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago