ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஷ்ணு விஷால்!

By செய்திப்பிரிவு

நடிகர் விஷ்ணு விஷால், ‘ஆர்யன்’ படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதை கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே இயக்குகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணிபோஜன், செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.

படம் பற்றி ‘இந்து தமிழ் திசை’யிடம் இயக்குநர் பிரவீன்.கே கூறும்போது, “இது ஆக் ஷன் த்ரில்லர் படம். விஷ்ணு விஷால் இதற்கு முன் போலீஸ் கதைகளில் நடித்திருந்தாலும் இது அதில் இருந்து வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. அடுத்தடுத்து நடக்கும் கொலைகளை விசாரிக்கும் விஷ்ணு விஷால் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை. திரைக்கதை விறுவிறுப்பாகவும் இயல்பாகவும் இருக்கும். ஷ்ரத்தா ஸ்ரீநாத், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வாணி போஜன் தடயவியல் நிபுணராகவும் நடிக்கின்றனர். திங்கட்கிழமை முதல் படப்பிடிப்புத் தொடங்குகிறது. ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்க இருக்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்