சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ திரைப்படம், 44-வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது சர்வதேச அளவில் படத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்த படம் 'கார்கி.' இந்தப் படத்தில் ஆர்.எஸ்.சிவாஜி, காளி வெங்கட், கவிதாலயா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் சக்தி ஃபிலிம்ஸுடன் இணைந்து வெளியிட்டது. ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'கார்கி' திரைப்படம் சர்வதேச ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 2 வரை ரஷ்யாவில் நடைபெற்ற 44-வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. குறிப்பாக ‘உலகமெங்கும் இருந்து தேர்வுசெய்யப்பட்ட வெற்றிப் படங்கள்’ எனும் பிரிவில் இந்தப் படம் திரையிடப்பட்டது.
» 100 கோடி க்ளப்பில் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’
» “சிம்பு ஆனந்தக் கண்ணீர் விடுவதைப் பார்க்க வேண்டும்” - கமல்ஹாசன்
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago