மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் தமன்னா

By செய்திப்பிரிவு

மலையாள நடிகர் திலீப் நடிக்கும் புதிய படத்தில் நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் தமன்னா மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.

இயக்குநர் அருண் கோபி இயக்கத்தில் திலீப் நடிக்கும் புதிய படத்திற்கு எழுத்தாளர் உதயகிருஷ்ணா திரைக்கதை எழுதுகிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை தமன்னா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்கிறார் தமன்னா. செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 130 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கொல்லத்தில் உள்ள கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் தீலிப், தமன்னா படத்தின் இயக்குநர் அருண் கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மதுர் பண்டார்கர் இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள 'பப்ளி பவுன்சர்' திரைப்படம் செப்டம்பர் 23-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல நடிகர் திலீப் இயக்குநர் ரஃபீ இயக்கத்தில் 'வாய்ஸ் ஆஃப் சத்யநாதன்' படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்