தமிழ்த் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் - பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகையுமான மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று கலை 11 மணிக்கு திருப்பதியில் நடைபெற்றது. இதில், இருவீட்டார் குடும்பங்களைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரும் புதுமணத் தம்பதியரான ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கருக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
தனது திருமணம் குறித்து ரவீந்தர் சந்திரசேகரன், ''மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க... ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கிடச்சா...'' என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சி பகிர்ந்துள்ளார். ''ரவீந்தர் சந்திரசேகரன் எனக்கு வாழ்க்கைத் துணையாக கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது'' என நடிகை மகாலட்சுமி சங்கர் கூறியுள்ளார். ‘சுட்டகதை’, ‘நட்புனா என்னான்னு தெரியுமா’, ‘முருங்கக்காய் சிப்ஸ்’ உள்ளிட்ட படங்களை ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago