விக்ரமின் ‘கோப்ரா’ முதல் நாளில் ரூ.9.28 கோடி வசூல்

By செய்திப்பிரிவு

விக்ரம் நடிப்பில் நேற்று (ஆகஸ்ட்31) வெளியான 'கோப்ரா' திரைப்படம் முதல் நாள் ரூ.9.28 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'கோப்ரா'. ஸ்ரீநிதி ஷெட்டி, மிருளானி ரவி, மீனாட்சி, கே.எஸ்.ரவிக்குமார், இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லலித்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிக்கப்படியான திரைகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று திரையரங்குகளில் வெளியான 'கோப்ரா' திரைப்படம் முதல் நாளில் ரூ.9.28 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் நீளம் காரணமாக 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE