'எங்கள் இலக்கு தமிழ்நாடு தான்' - வைரலாகும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டா வீடியோ

By செய்திப்பிரிவு

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைஞானி இளையராஜாவுடன் விமான நிலையத்திலிருந்து ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு பேட்டரி வாகனத்தில் இளையராஜாவுக்கு அருகில் ஏ.ஆர்.ரஹ்மானும் அமர்ந்துள்ளது.

ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இளையராஜா அண்மையில் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதேபோல் அண்மையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்கா சென்றிருந்தார்.

இந்நிலையில் இளையராஜாவுடன் பேட்டரி வாகனத்தில் தான் பயணிக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் இன்று காலை (செப்.1) பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த வீடியோவைப் பற்றி அவர், "நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடு தான்" என்று பதிவிட்டுள்ளார். தான் அமெரிக்காவில் இருந்தும் இளையராஜா ஹங்கேரியில் இருந்தும் திரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா போஸ்ட்டில் இளையராஜாவையும் ரஹ்மான் டேக் செய்துள்ளார்.

இந்து தமிழ் இணையதளத்தில் இச்செய்தி பதிவு செய்யப்பட்ட நேரத்தில் இந்த இன்ஸ்டா வீடியோ 7 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகியிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்