'லால் சிங் சத்தா' படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக நடிகர் ஆமீர்கான் படத்தில் நடித்தற்கான ஊதியத்தை வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
4 ஆண்டுகளுக்குப்பிறகு ஆமீர்கான் தயாரித்து நடித்த திரைப்படம் 'லால் சிங் சத்தா'. ஹாலிவுட் க்ளாசிக் திரைப்படமான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் ரீமேக்காக உருவான இப்படம் பான் இந்தியா முறையில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் 'பாய்காட் லால் சிங் சத்தா' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.
இந்த ட்ரெண்டிங் படத்தின் வசூலை பெரிய அளவில் பாதித்ததாக கூறப்படுகிறது. படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்த போதிலும், திரையரங்குகளில் பெரிய அளவில் கூட்டம் கூடவில்லை. இதனால் படத்தின் வசூல் கடுமையாக பாதித்தது.
இந்நிலையில் படத்தினால் ஏற்ப்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக தான் நடித்ததற்கான ஊதியத்தை நடிகர் ஆமீர்கான் வாங்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமீர்கான் தனது நடிப்புக்கான கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்தால், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி நஷ்டம் ஏற்படும் என்பதால் தனக்கு சேர வேண்டிய ஊதியத்தை வேண்டாம் என கூறி மறுத்துள்ளராம். படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago