நீளம் குறித்த எதிர்மறை விமர்சனம் - ‘கோப்ரா’ பட 30 நிமிட காட்சிகள் ‘கட்’ ஆக வாய்ப்பு

By செய்திப்பிரிவு

விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தின் நீளம் அயற்சியை ஏற்படுத்துவதாக கூறி பல எதிர்மறை விமர்சனங்கள் வெளியானதையொட்டி, படத்தின் 30 நிமிட காட்சிகள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட்31-ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'கோப்ரா'. ஸ்ரீநிதி ஷெட்டி, மிருளானி ரவி, மீனாட்சி, கே.எஸ்.ரவிக்குமார், இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

லலித்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிக்கப்படியான திரைகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதில், குறிப்பாக படத்தின் நீளம் அயற்சியைத் தருவதாக பல எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகின.

கோப்ரா விமர்சனத்தைப் படிக்க : கோப்ரா Review: சீறிப் பாயாமல் ஊர்ந்து நெளிந்து ‘அச்சுறுத்தும்’ பாடம்!

இதையடுத்து படத்தின் நீளத்தை குறைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 30 நிமிட காட்சிகள் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை அடுத்து பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். 'கோப்ரா' படத்தின் நீளம் 3 மணி நேரம் 3 நிமிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE