யுவன் பிறந்த சந்தோஷத்தில் கம்போஸ் செய்த ‘சினோரீட்டா’ பாடல்: இளையராஜா சிறப்பு பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘ஜானி’ திரைப்படத்தின் கம்போஸிங்கிற்காக ஆழியாறு சென்றிருந்தபோது, யுவன் பிறந்த செய்தி கேட்ட சந்தோஷத்தில் 'சினோரீட்டா' பாடலை கம்போஸ் செய்ததாக கூறிய இசையமைப்பாளர் இளையராஜா, யுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "ஒரு காலக்கட்டத்தில் வந்து ஆழியாறு டேம் சென்று கம்போஸ் செய்வது கொஞ்ச காலம் பழக்கமாக இருந்தது. நிறைய படங்களுக்கு ஆழியாறு டேம் கெஸ்ட் ஹவுஸில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி, ஒரு நான்கைந்து படங்களுக்கு கம்போஸ் செய்வது என்று முடிவு செய்து செல்வோம்.

அந்த மாதிரி ஒரு கம்போஸிங்கிற்கு இயக்குநர் மகேந்திரனும், கேஆர்ஜியும் என்னை அழைத்துச் சென்றனர். நான் என் குழுவினருடன், அப்போதெல்லாம் பக்க வாத்தியம் வாசிப்பவர்களும் உடன் வருவார்கள். அவர்களுடன் சென்று கம்போஸிங் பண்ணிக்கொண்டிருந்தோம்.

தயாரிப்பாளர் கேஆர்ஜிக்கு கோவையில் வீடு இருப்பதால், அவர் அங்கு சென்று வருவார். அப்படி சென்றவர் மாலையில் வந்தவர், என்னுடைய மனைவிக்கு பிரசவம் நடந்துள்ளதாகவும், மகன் பிறந்திருப்பதாகவும் என்று சொன்னார். அப்போது சந்தோஷமாக இருந்தது.

என்னுடைய மனைவி பிரசவத்தின்போதுகூட கம்போஸிங் செய்வதென்றுதான் இருந்திருக்கேனே தவிர, மனைவியை பக்கத்தில் இருந்து பார்த்துக்கவே இல்லை. எனது மனைவியும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மகன் பிறந்திருப்பதாக வந்து செய்தி சொன்ன நேரத்தில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அன்று கம்போஸ் செய்த பாட்டு சினோரீட்டா என்ற பாடல். ரஜினிகாந்த் நடித்த அந்தப் படத்தின் பெயர் ஜானி. தயாரிப்பாளர் கேஆர்ஜி, இயக்குநர் மகேந்திரன். கேஆர்ஜி வந்து தகவல் சொன்ன நேரத்தில் பிறந்தது யுவன். யுவன் ஹேப்பி பர்த்டே யுவன்" என்று தனது வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்