‘மாஸ்’ காட்டும் ‘திருச்சிற்றம்பலம்’ 11 நாளில் ரூ.70 கோடி வசூல்

By செய்திப்பிரிவு

தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் படம் வெளியான 11 நாளில் ரூ.70.75 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'யாரடி நீ மோகினி', 'உத்தம புத்திரன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் மீண்டும் தனுஷுடன் இணைந்த திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையைமத்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

உலகளவில் 600 திரையரங்குகளில் வெளியான இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. இதனால் படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.9.52 கோடியை வசூலித்தது.

அந்த வகையில் முதல் வாரம் மட்டும் ரூ.51.42 கோடி ரூபாயை படம் வசூலித்தது. இரண்டாவது வாரத்தின் முதல் நாள் ரூ.3.47 கோடியும், இரண்டாவது நாள் ரூ.4.61 கோடியும், மூன்றாவது நாள் ரூ.5.22 கோடியும், நான்காவது நாள் ரூ.6.03 கோடியுடன் வசூலில் முன்னேற்றம் காணும் இப்படம் தற்போது வரை ரூ.70.75 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விடுமுறை நாட்கள் வர உள்ளதால் படம் விரைவில் ரூ.100 கோடியை எட்டும் என திரை வர்த்தகர்களால் கணிக்கப்படுகிறது.

மேலும், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில், கமலின் 'விக்ரம்', விஜய்யின் 'பீஸ்ட்' படங்களைத்தொடர்ந்து 'திருச்சிற்றம்பலம்' வசூலில் 3-வது இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE