விஷாலின் மார்க் ஆண்டனி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 

By செய்திப்பிரிவு

நடிகர் விஷாலின் பிறந்த நாளையொட்டி அவர் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'லத்தி'. இப்படத்தினை தமிழ் நடிகர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து 'ராணா புரொடக்ஷன்' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப்படத்தைத் தொடர்ந்து விஷால் அடுத்ததாக நடிக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தை 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஷாலின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பொறுத்தவரை தாடி, மீசையுடன் கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார் விஷால்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE