ரசிகரின் காலில் விழுந்த பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன்

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் காலில் ரசிகர் ஒருவர் விழ, அதற்கு பதிலாக உடனே ஹ்ரித்திக்கும் அவர் காலில் விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்த திரைப்படம் 'விக்ரம் வேதா'. கடந்த 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இப்படம் இந்தியில் ரீமேக்காக்கி வருகிறது.

தமிழில் இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்கியுள்ளனர். இதில் விஜய் சேதுபதி வேடத்தில் ஹிர்த்திக் ரோஷனும், மாதவன் வேடத்தில் சயீப் அலிகானும் நடித்துள்ளனர். மேலும் ராதிகா ஆப்தே தமிழில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் டீசரை கொண்டாடினர். வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ஹிர்த்திக் ரோஷன் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, அவர் எதிர்பார்க்காத நிலையில், ரசிகர் ஒருவர் அவரது காலில் விழுந்தார். அதற்கு பதிலாக உடனே ஹிர்த்திக் ரோஷனும் ரசிகரின் காலில் விழுந்தார். இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் ஷேர் செய்தும், ஹிர்த்திக்கின் இந்த செயலை பாராட்டியும் வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்