தெலுங்கு நடிகை தேஜஸ்வி மடிவாடா, தமிழில், ‘நட்பதிகாரம் 79’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்போது ‘கமிட்மென்ட்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், தெலுங்கு நடிகரின் ரசிகர்களால், தான் மதுவுக்கு அடிமையானதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அங்கு நடிகர் கவுசலும் கலந்துகொண்டார். அவர் ரசிகர்கள், எனக்கு எதிராக மோசமான செயல்களில் ஈடுபட்டனர். கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால் வேதனை அடைந்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் விரக்தியை போக்குவதற்காக மதுவுக்கு அடிமையாகிவிட்டேன். இப்போது அதில் இருந்து மீண்டு வந்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வாய்ப்புக்காக பாலியல் சலுகைகளைப் பெண்களிடம் எதிர்பார்ப்பது அனைத்து துறைகளிலும் இருக்கிறது என்று இவர் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
28 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago