தமிழக ரசிகர் ஒருவர், தனக்கு கோயில் கட்டி இருப்பதாக நடிகை ஹனி ரோஸ் தெரிவித்துள்ளார்.
தமிழில், முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி உட்பட சில படங்களில் நடித்தவர், மலையாள நடிகை ஹனி ரோஸ். தெலுங்கிலும் நடித்து வரும் இவர், சமீபத்தில் தமிழக ரசிகர் ஒருவர், தனக்கு கோயில் கட்டி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “எனது முதல் படத்தில் இருந்தே பாண்டி என்ற ரசிகர் என்னுடன் போனில் பேசி வருகிறார். என் படங்கள் ரிலீஸ் ஆகும்போது பாராட்டு தெரிவிப்பார். இப்போது அவர் எனக்குக் கோயில் கட்டியிருக்கிறார். என் பிறந்த நாளுக்கு அவர் பாயாசம் வழங்கி வருகிறார். இவ்வளவு வருடமாக ரசிகர் ஒருவர் என்னை தொடர்வது ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். ஆனால், எங்கு கோயில் கட்டப்பட்டுள்ளது என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
43 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago